Discoverஎழுநாபுலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

Update: 2023-01-11
Share

Description

ஈழத் தமிழர்களின் மரபுரிமையைப் (Heritage) பாதுகாப்பதற்கான ஒரு வழிவரைபடத்தை இந்தக் கட்டுரை உருவாக்க முயல்கிறது. இன்று, 'ஈழத் தமிழர்கள்' என்ற பதப் பிரயோகம் புவியியல் ரீதியாக இலங்கைத் தீவுக்குள் வாழுகின்ற சிறுபான்மைத் தமிழர்களை மட்டுமின்றி, உலகில் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. இன்று  அது தன்  புவியியல் எல்லை கடந்த உணர்வுத் திரட்சி; ஒடுக்குமுறையும், மனக்காயங்களும் கட்டமைத்த ஒரு தேசம்.





ஈழத் தமிழர் மரபுரிமை என்பது உள்நாடு மற்றும் புலம்பெயர்ந்த நிலங்கள் என்ற இருமடிப்புடைய ஒரு கூட்டுப் பிரதிநிதித்துவம் ஆகும். ஒரு தலைமுறை,  நாடு கடந்தது; இன்னொரு தலைமுறை, புதிய நிலங்களில் பிறந்தது; தமிழ் அதன் அரசியற் பண்பாட்டுத் தளத்தில் இருந்து பல மொழியாற் பேசியத் தொடங்கியது.



ஒரு சமூகத்தின் அடையாளத்தை, அதன் கடந்த காலத்து சமூக வரலாற்று பின்னணியில் கட்டியெழுப்புவதற்கு மரபுரிமை இன்றியமையாதவொரு கருவியாக காணப்படுகிறது. அதனடிப்படையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டமைப்புசார் பண்பாட்டு இனப்படுகொலைப் (cultural genocide) பின்னணியில் அதற்கெதிரான எதிர்ப்பு அரசியல் திட்டத்தில் – ‘மரபுரிமைப் பாதுகாப்பு’ என்பது மிக அத்தியாவசியச் செயற்பாடாக காணப்படுகிறது.





மரபுரிமையின் முக்கியத்துவம் பற்றிய அறியாமையாலும், அதனை உதாசீனஞ் செய்தலாலும், ஈழத் தமிழர்களே இந்த மரபுரிமை அழிப்பின் பிரதானமான முகவர்களாக உள்ளனர் என்பதுதான் மிகத் துரதிர்ஷ்டவசமான வரலாற்று யதார்த்தமாகக் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ‘தங்கள் வேர்களைத் தாங்களே அடியோடு பிடுங்கியும்’, தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்தும் மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வரலாற்றிற் காணப்படும் முரண்மிகுந்த யதார்த்தமாகும்.

Comments 
loading
In Channel
loading
00:00
00:00
1.0x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் - I | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

Ezhuna